டிசம்பரில் சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ்?

0
163

டிசம்பரில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ்?

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதோடு லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தை வரும் டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்க, பிரியங்கா அருள்மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் விறுவிறுப்பாக துவக்கியுள்ளது படக்குழு. விடிய விடியவும் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

படத்தை வரும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வெளியிட சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.ஜே சூர்யா,சிவாங்கி உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரவில் ஷூட்டிங் நடந்த புகைப்படங்களை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.