டாப்சி தயாரிக்கும் படத்தில் சமந்தா

0
131

டாப்சி தயாரிக்கும் படத்தில் சமந்தா

சமந்தா கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து முன்பை விட தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 2 படங்கள் கைவசம் உள்ளன. பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு இந்தி பட வாய்ப்புகளும் வருகின்றன.

இந்த நிலையில் இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்து சமீபத்தில் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறிய டாப்சி தயாரிக்க உள்ள புதிய இந்தி படத்தில் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் சமந்தாவுக்கு இது அறிமுக படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தயாரிப்பாளரானது குறித்து டாப்சி ஏற்கனவே அளித்துள்ள பேட்டியில், ‘‘திறமையான நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே பட நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்‘‘ என்றார்.