டாக்டர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
205

டாக்டர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘டாக்டர்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை வருகிற மார்ச் 26-ந் தேதி வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. பின்னர் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ரம்ஜான் பண்டிகையை ஒட்டி படத்தை பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்குமாறும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.