ஜோதிகாவின் 50-வது திரைப்படம் ‘உடன்பிறப்பே’: அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது

0
142

ஜோதிகாவின் 50-வது திரைப்படம் ‘உடன்பிறப்பே’: அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது

பிரபல நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ ஆயுதபூஜை தினத்தை முன்னிட்டு வருகிற (அக்டோபர்) 14ஆம் தேதி ஓ.டி.டி தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனமும், அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும் இணைந்து நான்கு திரைப்படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் முதல் படமாக, அரிசில் மூர்த்தி இயக்கத்தில், மிதுன் மாணிக்கம் – ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவான ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டிடி. தளத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து, ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’ ஆயுதபூஜை தினத்தை முன்னிட்டு வருகிற (அக்டோபர்) 14ஆம் தேதி ஓ.டி.டி தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது

நல்ல கதையம்சத்துடன் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டும் கவனமாக தேர்வு செய்து நடித்துவரும் ஜோதிகா, சகோதரன் – சகோதரிக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்ட ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரது சகோதரராக சசிகுமார் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ’கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.