”ஜெய் பீம் சூப்பர்; சூர்யாவுக்காக செம சுவாரசியமான கதை தயார் செய்துள்ளேன்” – சிறுத்தை சிவா

0
133

”ஜெய் பீம் சூப்பர்; சூர்யாவுக்காக செம சுவாரசியமான கதை தயார் செய்துள்ளேன்” – சிறுத்தை சிவா

இயக்குநர் சிறுத்தை சிவா ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டியிருப்பதோடு, சூர்யாவுடன் இணையும் படம் குறித்து அப்டேட் செய்துள்ளார்.

தீபாவளியையொட்டி சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் ‘அண்ணாத்த’ வெளியாகியுள்ளது. இரண்டே நாளில் 100 கோடி ரூபாய்க்குமேல் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த நிலையில், ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சிறுத்தை சிவா.

”சூர்யா சாரின் ‘சூரரைப் போற்று’, ’ஜெய் பீம்’ பார்த்தேன். சூப்பராக உள்ளது. இரண்டும் மிகச்சிறந்த படங்கள். மிகச்சிறந்த இயக்குநர்கள். மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் சூர்யா சார். ’ஜெய் பீம்’ படத்தில் சூர்யா சார், மணிகண்டன் சார் அனைவரது நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது. அடுத்ததாக சூர்யா சாருடன் பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன். அவருக்காக செம சுவாரசியமான கதை தயார் செய்து வைத்துள்ளேன்” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார்.