ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் பரிசாக ஆர்ஆர்ஆர் படத்தின் கொமரம் பீமாக வெறித்தனம் காட்டும் புதிய போஸ்டர்

0
231

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் பரிசாக ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் கொமரம் பீமாக வெறித்தனம் காட்டும் புதிய போஸ்டர்

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ராஜமெளலி இயக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இருந்து புதியப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அஜய் தேவ்கான், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

முன்னதாக இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘பீம்’, ராம் சரண் நடிக்கும் ‘ராமராஜு’ கதாபாத்திரங்களின் டீஸர் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆலியா பட்டின் ‘சீதா’ கதாபாத்திரத்தின் போஸ்டரும் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது. ராஜமெளலி மூன்று படங்களில் ஜூனியர் என்.டி.ஆருடனும், ராம் சரணுடன் ’மஹதீரா’ படத்திலும் இணைந்து பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில், “ என்னுடைய பீமின் இதயம் தங்கம் போன்றது. ஆனால் புரட்சி என்று வந்துவிட்டால் அவன் பலமாகவும், தைரியம் மிகுந்தவனாகவும் இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஜூனியர் என்.டி.ஆரின் 30ஆவது படத்தை கொரடலா சிவா இயக்க உள்ளார்.