ஜிம்மில் சிரஞ்சீவியுடன் பிரகாஷ் ராஜ்: அறுவை சிகிச்சைக்குப்பின் வெளியிட்ட புகைப்படம்

0
209

ஜிம்மில் சிரஞ்சீவியுடன் பிரகாஷ் ராஜ்: அறுவை சிகிச்சைக்குப்பின் வெளியிட்ட புகைப்படம்

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் உடல்நலம் தேறி, நடிகர் சிரஞ்சீவியுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வீட்டில் இருக்கும்போது நடிகர் பிரகாஷ் ராஜ் சறுக்கி விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இடது கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. ’வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்த நிலையில், அறுவை சிகைச்சைக்குப்பின் உடல்நலம் தேறியவர், இன்று அதிகாலையில் ஜிம்மில் உடற்பயிற்சிக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட கைகளுடன் கட்டோடு சென்றுள்ளார். அங்கு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் உடற்பயிற்சிகாக வரவே, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்சாகமுடன் வெளியிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜ் தற்போது ’சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.