ஜாதி ஒடுக்குமுறை பற்றி பேசவரும் ”அம்புநாடு ஒன்பதுகுப்பம்”

0
168

ஜாதி ஒடுக்குமுறை பற்றி பேசவரும் ”அம்புநாடு ஒன்பதுகுப்பம்”

பி.கே.பிலிம்ஸ் பூபதிகார்த்திகேயன் தயாரிப்பில் “அம்புநாடு ஒன்பதுகுப்பம்” இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த விழாவில் கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், அன்புசெழியன், விடுதலைசிறுத்தைகள் சங்கதமிழன், தமிழா தமிழா பாண்டியன், மகிழ்னன், மைனர் வீரமணி, பேரலை இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கதையின் நாயகனாக சங்ககிரி மாணிக்கம், நாயகியாக ஹர்ஷிதா, பிரபுமாணிக்கம், மதன் ரமேஷ் மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“ஊரார் வரைந்த ஓவியம்” நாவலை அடிப்படையாக வைத்து கிராமங்களில் இரண்டு சமூகங்களில் நடக்கும் ஜாதி ஒடுக்குமுறை பற்றி உருவாக்கப்பட்டுள்ள தமிழ்சினிமாவில் “அம்புநாடு ஒன்பதுகுப்பம்” மிக முக்கியமான படம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றும் நிஜத்தில் இருக்கும் ஒன்பது நாட்டு ஊர் தலைவர்களை பற்றி படம் பேசுகிறது.

கந்தர்வக்கோட்டை, கரம்பகுடி பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது “அம்புநாடு ஒன்பது குப்பம்”.

ஒளிப்பதிவு: ஒ.மகேஷ்

இசை: அந்தோனிதாசன்

பின்னனி இசை: ஜேம்ஸ் வசந்தன்

எடிட்டிங்: பன்னீர்செல்வம்

பாடல்கள்: லாவரதன், கடல்வேந்தன்

திரைக்கதை, இயக்கம்: ராஜாஜி

மக்கள் தொடர்பு : ராஜ்குமார்