ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இதயம் தொடும் பாடலை பாடிய யுவன் ஷங்கர் ராஜா

0
101

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இதயம் தொடும் பாடலை பாடிய யுவன் ஷங்கர் ராஜா

இதயம் தொடும் பாடலை வெளியிட்ட பிரபாஸின் அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும்.

படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முப்பரிமாண காணொளியாக இன்று வெளியிடப்பட்டுள்ள பாடல் ஒரு முன்மாதிரி முயற்சியாக அமைந்துள்ளது.

உள்ளார்ந்த அர்த்தங்களை கொண்டுள்ள இந்த பாடல் இரண்டு முக்கிய பரிமாணங்களை கொண்டுள்ளது. காணொளியில் ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னொன்று ராதே ஷியாம் வெள்ளித்திரையில் வெளியாகும் போது ரசிகர்களை பரவசப்படுத்தும்.

சமீபத்தில் நடிகர் பிரபாஸின் பிறந்த நாளானன்று ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்தது.

ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட டீசர் அவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பிரத்யேகமானது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மேலும், வேறு எந்த நடிகரும் சமீப வருடங்களில் இத்தகைய வேடத்தில் நடித்திருப்பதாக தெரியவில்லை.

ராதே ஷியாம் படத்திலிருந்து பிரபாஸின் சிறப்பு போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது நினைவிருக்கலாம். பல வருடங்களுக்கு பிறகு பிரபாஸ் காதல் கதையில் நடிப்பதைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். முதன்முறையாக பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்வதால் இந்த கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இவர்கள் இருவரின் சிறப்பு போஸ்டரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளன்றும் ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஜனவரி 14, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம். பன்மொழிப் படமான ராதே ஷியாமை ராதா கிருஷ்ணகுமார் இயக்க யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.