சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு

0
139

சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு

சயின்ஸ் பிக்சன் கதையில், டைம் லூப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஒளிபரப்ப ஆயத்தமாகி வருகிறது

கடந்த நவ-25ஆம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த மாநாடு படம் வெளியானது ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் காமெடி என சரிவிகித கலவையாக, டைம் லூப்பில் நகரும் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருந்த இந்த மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட தயாராகி வருகிறது..

நாயகன் அப்துல் காலிக் தொடர்ச்சியாக டைம் லூப்பில் மாட்டிகொண்ட பின்னர் வாழ்க்கையையே புரட்டிப்போடும் நிகழ்வுகளில் கொண்டுபோய் அவரை சிக்கவைகிறது.. நீதிக்கு புறம்பான செயல்களை செய்ய முற்படும்போதும் நம்முடைய சுயநலத்துக்காக அழிவுகரமான செயல்களில் ஈடுபடும்போதும் இந்த உலக விதிகள் எப்படி மீறப்படுகின்றன என்பதை மையப்படுத்தி மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது..

நேர்மையான , ஊழலுக்கும், குற்றங்களுக்கும் எதிராக போராடும் மனிதராக அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு அற்புதமாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஓய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் மிக முக்கியமான பங்களிப்பை தந்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ரிச்சர்டு எம்.நாதனின் இசையும் படத்திற்கு பரபரப்பை கூட்ட, அந்த விறுவிறுப்பை எந்தவித குழப்பமும் இல்லாமல் பார்வையாளர்களுக்கு கடத்தி இருந்தார் எடிட்டர் கே.எல்.பிரவீண்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்தப்படம் வரும் டிச-24ல் சோனி லைவ்வில் ஒளிபரப்பாகிறது.