சூர்யா தவறாக நடக்கவோ பேசவோ மாட்டார் – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேச்சு!

0
317

சூர்யா தவறாக நடக்கவோ பேசவோ மாட்டார் – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேச்சு!

நடிகர் சூர்யா எந்த ஒரு விவகாரத்திலும் தவறான கருத்துக்களை பேச மாட்டார் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகம், சென்னை – அண்ணா சாலையில் திறக்கப்பட்டது. சங்கத்தின் செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகரன், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, லலித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, திரைப்படத் தயாரிப்புத்துறை சுமுகமான முறையில் செல்ல வேண்டும் என்பதே நோக்கம் என்றார். மேலும், நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பற்றி கேள்வி எழுப்பியபோது, சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் என்று பாரதிராஜா கூறினார்.