சீரியஸான நடிகை நிக்கி கல்ராணி – மிர்ச்சி சிவா

0
123

சீரியஸான நடிகை நிக்கி கல்ராணி – மிர்ச்சி சிவா

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள ஜனரஞ்சகமான பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் ‘இடியட்’

தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு ‘இடியட்’ தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களை தவிர ஆனந்தராஜ், ஊர்வசி, அக்ஷரா கவுடா, ரவி மரியா மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“எல்லோரும் எப்போதாவது ஒரு முறையாவது முட்டாள்தனமாக நடந்துகொள்ளுவது இயல்பு. அப்படி நடந்து கொள்பவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் ‘இடியட்’.

மற்ற பேய் படங்களை போல் இல்லாமல் ஜனரஞ்சகமாக குழந்தைகளோடு பார்க்க கூடிய பேய் படமாக ‘இடியட்’ இருக்கும்,” என்று இயக்குநர் ராம்பாலா கூறுகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தென்காசி, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

ராஜா பாட்டாசார்ஜீ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் படத்தொகுப்புக்கு மாதவன் பொறுப்பேற்றுள்ளார்.

அனைவரையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘இடியட்’ கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சிவா பேசும்போது, ‘கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப்படத்தை பற்றி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது. ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும், ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை.

டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும். எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி’ என்றார்.