சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் பாதிப்பு: சிகிச்சைக்கு நிதியுதவி அளிப்பதாக சோனு சூட் உறுதி
நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர். அஜித்தின் ‘வரலாறு’ படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடலுக்கும் நடனம் அமைத்தவர் இவரே.
சூப்பர் ஹிட் அடித்த ராஜமெளலி – ராம் சரணின் ‘தீரா தீரா தீரா’ பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வரலாறு’, ‘பரதேசி’, ’அரண்மனை’, ’கஜினிகாந்த்’ உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்தவர் சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மேலும் கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய் கிருஷ்ணா திரை பிரபலங்கள் உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சைக்கு சோனு சூட் உதவுவதாக உறுதி அளித்திருக்கிறார்.
Iam already in touch with the family,
Will try my best to save his life 🙏 https://t.co/ZRdx7roPOl— sonu sood (@SonuSood) November 25, 2021