சிவகார்த்திகேயனின் ‘SK20’ படப்பிடிப்பு இன்று முதல் துவக்கம்
Suresh Productions-Sree Venkateswara Cinemas LLP-Shanthi Talkies வழங்கும், ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV இயக்கத்தில், இசையமைப்பாளர் தமன் இசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது.
2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் முதலாக முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.
தற்போதைக்கு ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் உருவாகிறது. Suresh Productions சார்பில் திரு.சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ் D.ராமாநாயுடு அவர்களின் மகன்) நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை வழங்குகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு S.S.தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை, இது ‘SK 20’ படத்திற்கு ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.