சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித் காமெடி நடிகரை கன்னத்தில் அறைந்தார்! என்ன காரணம் தெரியுமா?

0
118

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித் காமெடி நடிகரை கன்னத்தில் அறைந்தார்! என்ன காரணம் தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ், உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. அதன்படி, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது,

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

இந்த நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை டிரைவ் மை கார் (Drive my car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இந்த படத்தை யூசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) இயக்கி உள்ளார்.

இந்நிலையில் விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், சிறந்த ஆவணப்படத்திற்கான பரிசை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிண்டலான தொனியில் வில் ஸ்மித் மனைவி பற்றி பேசத் துவங்கினார். அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் இறுக்கமாக செதுக்கப்பட்ட முடியை “ஜி.ஐ. ஜேன்” படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு ஒரு நகைச்சுவையை கூறினார். உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து மேடைக்கு சென்றார் வில் ஸ்மித். யாருமே எதிர்பார்க்காத வகையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

ஸ்மித் அறைந்ததும் அரங்கம் முழுவதும் அமைதி மற்றும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஸ்மித் அமைதியாக தனது இருக்கைக்குத் திரும்பினார். பின்னர் உரத்த குரலில் “என் மனைவியின் பெயரை உங்கள் வாயில் இருந்து உச்சரிக்காதீர்கள்” என்று கத்தினார். இந்த சம்பவம் வீடியோவாக சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. இது திட்டமிடப்பட்டதா அல்லது உண்மையானதா என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அலோபீசியா என்பது திட்டு திட்டாக முடி உதிரும் நோய். 2018 இல் தனக்கு இந்த நோய் இருப்பதாக ஐடா பிங்கெட் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தன் காதல் மனைவியிடம் உள்ள உடல்நலக் குறைவை நகைச்சுவையாக்கியதால் ஸ்மித் கோபம் கொண்டு அறைந்திருப்பார் என கூறப்ப்படுகிறது.