சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்

0
197

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் வெளியானது. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். சமீபமாக வெற்றியை ருசிக்க போராடிக் கொண்டிருந்த சிம்புவுக்கு இப்படத்தின் வெற்றி பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து சிம்பு நடிப்பில், கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் (Corona Kumar) என்ற படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்தப் படத்தையும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்த முக்கிய தகவலொன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்த கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.