சினிமா நிபுணர்களின் உற்சாகமான வகுப்புகள் மற்றும் உரையாடல் அமர்வுகள் நடப்பு ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காத்திருக்கின்றன

0
123

சினிமா நிபுணர்களின் உற்சாகமான வகுப்புகள் மற்றும் உரையாடல் அமர்வுகள் நடப்பு ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காத்திருக்கின்றன

மைக்கேல் டக்ளஸ், பங்கஜ் திரிபாதி, ஜோயா அக்தர், இவர்களில் பரிச்சயமானவர்கள் பற்றி ஏதாவது தெரியுமா? திரைப்படத் தயாரிப்பு , நடிப்பில் தங்கள் படைப்புத் திறமையால் பலரின் இதயங்களைக் கவர்ந்த உலகப்புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் , நடிகர்கள், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் உரையாடல் அமர்வுகளை நடத்தவுள்ளனர்.

ஒரு அற்புதமான முன்னெடுப்பாக, திரைப்பட உருவாக்கத்தின் கலை மற்றும் திறன் குறித்த மாஸ்டர் கிளாஸ் மற்றும் உரையாடல் அமர்வுகள் இந்த விழாவில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 20 க்கும் மேற்பட்ட சினிமா நிபுணர்களின் வகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் நடிகர்களுடனான உரையாடல் அமர்வுகள் வரிசையாக நடைபெற உள்ளன.

கோவாவின் பஞ்சிமில் உள்ள ஃபெஸ்டிவல் மைலில் புதுப்பிக்கப்பட்ட கலா அகாடமியில் அமர்வுகள் நடைபெறும். பிரெண்டன் கால்வின், பிரில்லான்டே மெண்டோசா, சன்னி தியோல்,  ராணி முகர்ஜி, வித்யா பாலன், ஜான் கோல்ட்வாட்டர், விஜய் சேதுபதி, சாரா அலிகான், நவாசுதீன் சித்திக், கெய்கே மேனன், கரண் ஜோஹர், மதுர் பண்டார்கர், மனோஜ் பாஜ்பாய், கார்த்திகி கோன்சால்வ்ஸ், போனி கபூர், அல்லு அரவிந்த், தியோடர் க்ளூக், குல்ஷன் குரோவர் மற்றும் பலர் இந்த ஆண்டு அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.

பழம்பெரும் ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ் ‘ஒரு உலக சினிமாவுக்கான நேரமா?’ என்ற தலைப்பில் பிரத்யேக உரையாடல் அமர்வை நடத்துவதால் ஆழமான நுண்ணறிவுகள் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கான இணையற்ற வாய்ப்பு காத்திருக்கிறது. ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதையும் அவர் பெறவுள்ளார்.

இந்த ஆண்டு, மேலும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது, நிபுணர்களின் வகுப்புகளுக்கு மாணவர்களுக்கான நுழைவு மற்றும் பதிவு இலவசம். மேலும் விவரங்களுக்கு https://www.iffigoa.org/mcic.php என்ற இணையதளத்துக்கு செல்லவும்.