சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆகிடுச்சு… எப்படி போச்சுனே தெரியல? நடிகை சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு…

0
123

சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆகிடுச்சு… எப்படி போச்சுனே தெரியல? நடிகை சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு

நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறார்.

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி, பின்னர் ‘பாணாக்காத்தாடி “ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சமந்தா. இதனைத்தொடர்ந்து, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு, 24, அஞ்சான், கத்தி, தெறி போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பொதுவாக சினிமாவில் பிரபல ஹீரோயினாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கலக்கி விட்டு பின்னர் காணாமல் போகும் எத்தனையோ பேரை பார்த்திருப்போம். ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டுமே 10 ஆண்டுகளை கடந்தும் தனது மார்க்கெட் கொஞ்சமும் இறங்காமல் பார்த்துக் கொண்டு கொடி கட்டி சாதனை நாயகியாக திகழ்கின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் தன்னுடைய மார்க்கெட்டை கொஞ்சம் கூட இழக்காமல் உயர பறந்து கொண்டே செல்ல முழுக் காரணம் அவரது தனித்திறமை என்றே சொல்லலாம்.

நடிகை சமந்தா தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனையை சந்தித்தாலும் அவற்றையெல்லாம் தனது சினிமா வாழ்க்கையில் காட்டாமல் தொடர்ந்து தனது விடா முயற்சியால் தற்போது கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி வேற லெவல்ல கொடி கட்டி பறந்து வருகிறார்.

இப்படி தமிழ் மற்றும் தெலுங்கில் தனது திரைபயணத்தை தொடங்கிய நடிகை சமந்தா இன்று தனது சினிமா வாழ்க்கையின் 12வது ஆண்டை நிறைவு செய்த கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இது குறித்து தனது சோஷியல் மீடியா பக்கமான ட்விட்டரில் மற்றும் இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் இன்றுடன் நான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து சரியாக 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 12 ஆண்டுகளிலும் லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன். ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகச்சிறந்த தருணமாகவே இருந்தது. மேலும், எப்போதுமே என் பக்கம் நிற்கும் உலகிலேயே மிகவும் விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றதே எனது பெரிய பாக்கியம் என நடிகை சமந்தா நெகிழ்ச்சியான பதிவை போட்டு அட்டகாசமான ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதனையடுத்து சமந்தா போட்ட பதிவையும், புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்கள் சமந்தாவிற்கு தங்களது பாராட்டுகளையும், இன்னும் பல பல வெற்றி சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.