சித்ஸ்ரீராம் பாடிய கோயிலிலே என்கிற கட்டில் பட பாடல் வெளியீடு

0
184

சித்ஸ்ரீராம் பாடிய கோயிலிலே என்கிற கட்டில் பட பாடல் வெளியீடு

எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுத ‘கட்டில்’ படத்தை இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு  இயக்கி ஹீரோவாகவும் நடித்து தயாரித்துள்ளார்.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியர் ஷ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாடல் வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கரன்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு – மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ்

இப்படத்திற்காக சித்ஸ்ரீராம் பாடிய கோயிலிலே என்கிற பாடல் இன்று வெளியாகிறது. ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். இந்த கட்டில் படத்திற்காக சித்ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

அனைத்து மொழிகளிலும் தணிக்கை செய்யப் பட்டு ‘கட்’ இல்லாமல் கிளியர் யூ சான்றிதழை பெற்று திரையரங்குகளுக்கு வரத் தயாராக இருக்கிறதாம் கட்டில்.