சிச்சோர் திரைப்படத்துக்கு தேசிய விருது : சுசாந்த் சிங்கின் சகோதரி கொண்டாட்டம்!

0
123

சிச்சோர் திரைப்படத்துக்கு தேசிய விருது : சுசாந்த் சிங்கின் சகோதரி கொண்டாட்டம்!

மும்பை, நேற்று நடைபெற்ற 67வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிச்சோர் திரைப்படத்துக்கு சிறந்த இந்தி படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது

இதனை சிறப்பிக்கும் விதமாக மறைந்த இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதனுடன் சிச்சோர் படக்குழுவினருடன் சுசாந்த் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்டனர். அவர்கள் இந்த விருதை மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட்க்கு சமர்ப்பித்தனர்.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தன்னுடைய பந்த்ரா அபார்ட்மெண்ட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.