‘சாட்டை’ ஹீரோ யுவனுக்கு நடந்த கோலாகல திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து!

0
105

‘சாட்டை’ ஹீரோ யுவனுக்கு நடந்த கோலாகல திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து!

சாட்டை, அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி, விளையாட்டு ஆரம்பம், அய்யனார் வீதி போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த யுவன் என்கிற அஜ்மல் கான். இவருடைய தந்தை பெரோஸ் கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் யுவன் என்ற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது. இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது .

இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மன்சூர் அலிகான், ரியாஸ்கான் ,உமா ரியாஸ்கான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, மிஸ் இந்தியா சினேகா மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

யுவனின் திருமணத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.