சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு: ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி

0
165

சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு: ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கையில் இன்டர்நெட் இருந்தாலே போதும், சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது.  பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துவதால், அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது.

தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

“பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமானது. ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த ஐடி-யை ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.