’சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்?… ராகவா லாரன்ஸ் விளக்கம்!

0
347

’சந்திரமுகி 2’ ஹீரோயின் யார்?… ராகவா லாரன்ஸ் விளக்கம்!

ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் அடுத்தப்பாகம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்த நிலையில், 15 ஆண்டுகள் கழித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வாசு  இயக்கத்தில் சந்திரமுகி 2 வரவிருக்கிறது என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

சந்திரமுகி படமே மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த  மணிசித்ரதாழ் படத்தின் ரீமேக்தான். நடிகை சோபனா, மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்தார்கள். ஜோதிகா பாத்திரத்தில் நடித்த சோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இப்படம் வாங்கிக்கொடுத்தது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், சந்திரமுகி ஹீரோயின்கள் யார் என்பதில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டுக்கொண்டு வருகின்றன. ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி பெயர்களும் சொல்லப்படுகின்றன. இது அத்தனையும் பொய்யான செய்தி. தற்போது கதை எழுதும் பணி போய்க்கொண்டிருக்கிறது. முடிந்ததும் தயாரிப்பு நிறுவனம் ஹீரோயினை அறிவிப்பார்கள் என்று ராகவா லாரன்ஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.