சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள  ராஜ வம்சம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியீடு!

0
134

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள  ராஜ வம்சம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியீடு!

சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம், ராஜவம்சம். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். 49 நடி கர், நடிகைகளுடன் உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வரும் அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.