சங்கத்தலைவன் விமர்சனம்

0
321

சங்கத்தலைவன் விமர்சனம்

உதய் புரடெக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட ‘சங்கத்தலைவன்” படத்தில் சமுத்திரகனி , கருணாஸ் , மாரிமுத்து, ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி, பாலா சிங், ஜூனியர் பாலையா, சீனு மோகன்ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார்.

மாரிமுத்துவின் தறி தொழிற்சாலையில் விசைத்தறி ஓட்டும் தொழிலாளியாகப் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். பல பேர் பணிபுரிய இதில் திவ்யா என்ற பெண் எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டு கை துண்டாகிறது.  இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற நினைக்கும் மாரிமுத்து சிகிச்சை செலவு மட்டுமே ஏற்கிறார்.இதனால் கருணாஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சமுத்திரக்கனியிடம் இந்த பிரச்சனையை மறைமுகமாக சொல்கிறார்.சமுத்திரக்கனியின் தலையீட்டில் திவ்யாவுக்கு நஷ்ட ஈடு கிடைக்கிறது.இதனால் கோபமடையும் மாரிமுத்து கருணாஸ் தான் இதற்கு காரணம் என்று கண்டு பிடித்து வேலையை விட்டு தூக்கிவிடுகிறார். மாரிமுத்து கருணாஸ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த முற்படுகிறார். இதிலிருந்து கருணாஸ் தப்பித்தாரா?சமுத்திரக்கனியின் தூண்டுதல் கருணாஸின் வாழ்வை எப்படி மாற்றுகிறது? என்பதே மீதிக்கதை.

படத்தில் தொழில்சங்கத் தலைவராக சமுத்தரகனி, தொண்டனாக மாறி தலைவனாக மாறும் கருணாஸ், சமுத்திரகனியின் மனைவி  ரம்யா சுப்மணியன், கருணாஸின் காதலியாக சுனுலட்சுமி, வில்லனாக மாரிமுத்து, பாலாசிங், ஜுனியர் பாலையா, சீனு மோகன் ஆகியோர் சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்கின்றனர்.

ராபர்ட் சற்குணத்தின் இசையில் பாடல்களுடன் பின்னனி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் சிறப்பு.

இயக்கம் மணிமாறன்:- தறியுடன் என்ற பாரதிநாதன் நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள சங்கத்தலைவன் விசைத்தறி ஓட்டும் தொழிலாளி ஓர் இயக்கத்தின் தொண்டனாக மாறி, சமூக பிரச்னைகளை கையிலெடுத்து, மக்களின் இதயங்களில் தலைவராக இடம் பிடிப்பதே ‘சங்கத்தலைவன்” திரைக்கதை. முதலாளிகளை எதிர்த்து போராடும் தொழிலாளியின் கதையில் முதல் பாதி தோய்வில்லாமல் செல்ல இரண்டாம் பாதி புரட்சிகரமான கருத்துக்கள், வசனங்கள் என்று படம் பிரசார மேடையாக காட்சியளிக்கிறது என்பதே நிஜம்.

மொத்தத்தில் சங்கத்தலைவன் இதயங்களை வெல்லும் தந்திரம் அறிந்தவன்.