கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் விஷால்

0
331

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் விஷால்

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் பரவலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது.

கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கொரோனாவுக்கு அஞ்சி வீட்டுக்குள்ளேயே கதவடைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதுவரை ஒரு சிலரை தவிர நடிகர், நடிகைகள் யாருமே அதிகாரபூர்வமாக கொரோனா தொற்றினால் பாதிப்பட்டதாக தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில் நடிகர் சங்க செயலாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. அவரை அக்கறையோடு கவனித்து கொண்ட நடிகர் விஷாலுக்கும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சொல்லப்படும் சளி, இருமல் மற்றும் உடலின் வெப்பம் அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் இருவரும் ஆயுர்வேத மருந்தை உட்கொண்டு அதிலிருந்து குணமடைந்துள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

“அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு ஒத்தாசையாக இருந்த எனக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. என்னோடு பயணித்த எனது மேனேஜருக்கும் அந்த அறிகுறிகள் இருந்தன.

நாங்கள் எல்லோரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டோம். தற்போது அபாய கட்டத்தை கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம். இதை பகிர்வதில் மகிழ்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.