கொரோனா பரவல் அதிகரிப்பு: வலிமை பட வெளியீடு ஒத்திவைப்பு

0
92

கொரோனா பரவல் அதிகரிப்பு: வலிமை பட வெளியீடு ஒத்திவைப்பு

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 13 ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பட வெளியீட்டை ’வலிமை’ ஒத்திவைத்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்து இருக்கிறார். தியேட்டர்கள் முழுவதுமாக திறந்தவுடன் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.

ஏற்கனவே, ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்டப் படங்கள் இதே காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.