கே.ஜி.எஃப்-2 உடன் மோதும் அமீர்கானின் லால் சிங் சத்தா
அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரீலிசாக உள்ளது. அமீர்கான் தயாரித்து நடிக்கும் லால் சிங் சத்தா படமும், யஷ் நடிக்கும் கேஜிஎஃப்2 படமும் வெளியாகிறது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
பாலிவுட்டின் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், ”ஏப்ரல் 14ம் தேதி இரண்டு மிகப்பெரிய படங்களும் மோத உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
YASH & THE CLASH WITH KHANS…
⭐️ 21 Dec 2018: #KGF clashed with #Zero [#SRK]
⭐️ 14 April 2022: #KGF2 will clash with #LaalSinghChaddha [#AamirKhan]
This is a coincidence, what say?#Yash #Boxoffice pic.twitter.com/J6snmHbmRM— taran adarsh (@taran_adarsh) November 20, 2021