‘கே.ஜி.எஃப்’ படக்குழுவுடன் இணைந்த சுதா கொங்கரா

0
102

‘கே.ஜி.எஃப்’ படக்குழுவுடன் இணைந்த சுதா கொங்கரா

யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்திலான கே.ஜி.எஃப் – 2 படத்துக்கு உலக அளவில் கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு இந்திய சினிமா துறையே அசந்து போயிருக்கிறது.

படம் வெளியான ஆறே நாளில் சுமார் 600 கோடி அளவுக்கு வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இதனால் தயாரிப்பு நிர்வாகம் மிகவும் பூரித்து போயிருக்கிறது.

வழக்கமான கமெர்சியல் படமாக இருக்காமல் மக்களால் கொண்டாடப்படும் back to back ஹவுஸ் ஃபுல் ஆக திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் படமாக கே.ஜி.எஃப் – 2 இருப்பதை எண்ணி ஹோம்பேல் நிறுவனம் பெருமிதம் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஹோம்பேல் தயாரிப்பு நிர்வாகம். அதன்படி, இன்று வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், “ சில உண்மை கதைகள் சரியாக சொல்லப்பட வேண்டியவை” எனக் குறிப்பிட்டு, இயக்குநர் சுதா கோங்கராவுடன் அடுத்த படத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும், “எங்களின் எல்லா படங்களை போல இந்த கதையும் இந்தியாவின் கற்பனையை ஈர்க்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதவனின் இறுதிச் சுற்று, சூர்யாவின் சூரரை போற்று படங்களின் மூலம் ரசிகர்களிடம் சுதா கோங்கராவின் டிரைஷன் பெருமளவில் ஈர்க்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று ரீமேக்கை இயக்கி வருகிறார் சுதா.

அதன் பிறகு கேஜிஎஃப் படங்களின் தயாரிப்பு நிர்வாகத்துடனான படத்தை இயக்கவிருக்கிறார். முன்னதாக இந்தி சூரரை போற்றுக்கு பிறகு மீண்டும் சூர்யாவை சுதா இயக்குவதாக தகவல் வெளியானது. அது ஹோம்பேல் நிறுவனத்துடனான படமாக இருக்குமோ என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே ஹோம்பேல் நிறுவனம் கேஜிஎஃப் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் பிரபாஸின் சலார் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.