குடும்பத்தினருடன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்

0
137

குடும்பத்தினருடன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். மேலும் தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள ரஜினி ரசிகர்களும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். வீட்டில் மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவருடனும் ரஜினி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.