குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் , Trident Arts நிறுவனத்தின் “Production No 7” பூஜையுடன் துவங்கியது!

0
242

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் , Trident Arts நிறுவனத்தின் “Production No 7” பூஜையுடன் துவங்கியது!

Trident Arts நிறுவனம் புதுமையான, மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்ட படங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம். Trident Arts தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பு உள்ளது, அந்த வரிசையில் Trident Arts நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பாக “Production No 7” ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மற்றும் புகழ் முன்னணி பாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். பிரபல நடிகை நாயகியாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விளம்பர பட இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன், இந்த படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படம் ரொமான்டிக், காமெடி படமாக உருவாகிறது. மே 2021 இறுதியில் படபிடிப்பு துவங்கப்பட்டு, முழுக்க, முழுக்க சென்னையில் படமாக்க படவுள்ளது.

படம் குறித்து Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R. ரவீந்திரன் கூறியதாவது….

Trident Arts நிறுவனத்தில் எப்பொழுதும் புது விதமான கதைகளை படமாக்க, ஆவலாக உள்ளோம். இயக்குனர் ஹரிஹரன், இந்த கதையை விவரிக்கும் போது காதல், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை அம்சங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணர முடிந்தது. இப்பொழுது தமிழகத்த்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோர்க்கும் மிகப்பிடித்தவர்களாக மாறியுள்ள, அஸ்வின் மற்றும் புகழ் போன்ற சிறந்த கலைஞர்களை, ஒன்றாக இந்த படத்தில் கொண்டுவருவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். படபிடிப்பை மே மாத இறுதியில் தொடங்கவுள்ளோம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்போம்.

ALSO READ:

Trident Arts Production No.7 Cook with Comali Ashwin and Pugazh starrer launched with ritual ceremony