கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது செல்பி க்ளிக்கிய ஹீரோ – வைரலாகும் போட்டோ

0
397

கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது செல்பி க்ளிக்கிய ஹீரோ – வைரலாகும் போட்டோ

கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது பிரபல ஹீரோவும், இயக்குநரும் எடுத்துக் கொண்ட செல்பி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது செல்பி க்ளிக்கிய ஹீரோ – வைரலாகும் போட்டோகீர்த்தி சுரேஷ்

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’, ‘மிஸ் இந்தியா ஆகிய படங்கள் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்களில் ரிலீசாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

தமிழில் ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக ‘ரங் தே’ திரைப்படத்தில் அனு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

ரொமான்டிக் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக அமர்ந்து ஓய்வெடுத்த கீர்த்தி சுரேஷ் அப்படியே குட்டி தூக்கம் போட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கண்ணில் துணியைப் போட்டபடி நடிகர் நிதின் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லுரி இருவரும் அவர் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘ரங் தே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

தமிழில் ‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்ட இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.