காதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை

0
251

காதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை

தமிழில் பிரபு, ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் எஸ்தர் நோரன்ஹா. மங்களூரை சேர்ந்த இவர் மேலும் சில படங்களிலும் நடிக்கிறார். இந்தியில் சரோஜ்கான் இயக்கிய பரோமாஸ், குயாமத் ஹே குயாமத் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். எஸ்தருக்கும் பிரபல பின்னணி பாடகர் நோயல் சீன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. நோயல் சீன் தமிழில் அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி மற்றும் காதல்னா சும்மா இல்லை ஆகிய படங்களில் பாடி இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் பாடி உள்ளார். இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது அவர்களுக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது.

அதிகாரபூர்வமாக எஸ்தரும் நானும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டோம் என்று டுவிட்டரில் நோயல் தெரிவித்து உள்ளார். “எஸ்தருக்கு கடவுள் அருள் கிடைக்கட்டும். அவரது கனவுகள் நனவாகட்டும். இந்த கடினமான நாட்களில் எனக்கு துணையாக நின்ற குடும்பத்தினர் நண்பர்களுக்கு நன்றி” என்றும் கூறியுள்ளார்.