காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷ்ணு விஷால்

0
321

காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷாலுக்கும் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார்.

இன்று காதலி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கு பிறந்தநாள் பரிசாக நிச்சயதார்த்த மோதிரத்தை அளித்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “பிறந்தநாள் வாழ்த்துகள் ஜுவாலா கட்டா. வாழ்க்கையின் புதிய துவக்கம். நேர்மறையாக இருப்போம், நமக்கு, ஆர்யனுக்கு, நம் குடும்பங்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் நல்ல எதிர்காலத்துக்காக உழைப்போம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். நள்ளிரவில் மோதிரத்துக்கு ஏற்பாடு செய்த பசந்த் ஜெயினுக்கு நன்றி.” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.