‘காடன்’டிரைலரை உலக வன உயிரனங்கள் தினமான இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் 

0
131

காடன்’டிரைலரை உலக வன உயிரனங்கள் தினமான இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் 

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களின் நடிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

காட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் டிரைலர், உலக வன உயிரனங்கள் தினமான இன்று (மார்ச் 3) வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ‘ஆரண்யா’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ எனும் பெயரிலும் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில், ஷிரியா பில்கவுன்கர் மற்றும் ஜோயா ஹுசைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மூன்று மொழிகளிலும் கதாநாயகனாக ராணா நடிக்க, தமிழ் மற்றும் தெலுங்கில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், இந்தியில் புல்கிட் சாம்ராட்டும் நடிக்கின்றனர். மேலும், உன்னி எனும் யானை சிறப்பு வேடத்தில் தோன்றுகிறது.

சென்னையில் டிரைலரை வெளியிட்ட கையோடு ஹைதராபாத்துக்கு பறந்த படக்குழுவினர், அங்கு தெலுங்கு டிரைலரை வெளியிட்டனர். இரு நிகழ்ச்சிகளும் கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டன. இந்தி ரசிகர்களுக்காக காணொலி மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ளது. இவ்வாறாக, 24 மணி நேரத்தில் மூன்று நிகழ்ச்சிகள் என படக்குழுவினர் பரபரப்புக் குழுவாக மாறியுள்ளனர்.

“காடன் காட்டைப் பற்றிய கதை என்பதால், அதன் டிரைலரை வெளியிடுவதற்கு உலக வன உயிரனங்கள் தினம் பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். மும்மொழி ரசிகர்களையும் இப்படம் கவரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

வன சூழலியலைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை காட்டிலேயே செலவழிக்கும் ஒருவரைப் பற்றிய கதை தான் காடன். ‘பாகுபலி’ மற்றும் ‘தி காஜி அட்டாக்’ஆகிய மும்மொழி திரைப்படங்களுக்கு பிறகு, ராணாவின் மூன்றாவது மும்மொழி படம் இதுவாகும். மார்ச் 26-ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

காடன்

நடிகர்கள்

ராணா டக்குபட்டி

விஷ்ணு விஷால்

ஜோயா ஹுசைன்

ஷிரியா பில்கவுன்கர்

அனந்த் மகாதேவன்

ரகு பாபு

ரவி காலே

ஸ்ரீநாத்

ஆகாஷ்

சம்பத் ராம்

போஸ் வெங்கட்

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு: பிரபு சாலமன்

ஒளிப்பதிவு: அசோக் குமார் ராஜி

படத்தொகுப்பு: புவன்

தயாரிப்பு வடிவமைப்பு/கலை: மயூர் ஷர்மா

இசை: சாந்தனு மோயித்ரா

ஒலி வடிவமைப்பு: ரசூல் பூக்குட்டி

சண்டைக் காட்சிகள்: ஸ்டன் சிவா, ஸ்டன்னர் சாம்

காஸ்டிங்: முகேஷ் சப்ரா

நிர்வாக தயாரிப்பாளர்: சுஷில் திர்வாத்கர்

இணை தயாரிப்பாளர்: பாவனா மவுனிகா

பாடல்கள்: வனமாலி

நடனம்: நோபிள் பால்

உடைகள்: கீர்த்தி கோல்வான்கர் & மரியா தாரகன்

விஷுவல் எஃபெக்ட்ஸ்: வொயிட் ஆப்பிள், ஃபாந்தம் எஃப் எக்ஸ்

டிஜிட்டல் இண்டர்மீடியரி: பிரைம் ஃபோகஸ்

டிஐ வண்ணங்கள்: நிலேஷ் சவந்த்

ரீ-ரிக்கார்டிங் மிக்சிங்: ரசூல் பூக்குட்டி, பிபின் தேவ்

பாடல்கள்: ஈராஸ் மியூசிக்

தயாரிப்பு: ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்