கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மானின் ’ஹே சினாமிகா’ ட்ரெய்லர்

0
85

கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மானின் ’ஹே சினாமிகா’ ட்ரெய்லர்

துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ’ஹாய் வெல்கம் இசை எஃப்.எம் 103.2; இங்க ஹப்பினஸ்க்கு இல்ல எண்டு’என்று படபடவெனப் பேசி யாழனாக மனதில் பதிகிறார் துல்கர் சல்மான். மெளனாவாக அதிதி ராவ். இவர்கள் இருவருக்குமான காதல், திருமணம், பிரிவு என ஒவ்வொரு காட்சிகளுமே செம்ம இளமைத்துள்ளலுடன் காட்சிப்படுத்தப்பட்டு ‘ஹே சினாமிகா’வில் ’ஹேப்பினஸ்க்கு இல்ல எண்டு’ என்று மைண்ட் வாய்ஸ் மங்காத்தா ஆடுகிறது.

தாவி – பறந்து – குதித்து குதூகலத்துடன் காதல் செய்யும் துல்கர் – அதிதி காதல் புயலைப்போல் காட்சிப்படுத்தப்பட்டு ட்ரெய்லரின் இடையில் சரியாக 1.03 நிமிடத்தில் ஒலிக்கும் ‘தோழி தோழி என்ன தோழி’ பிரதீப் குமாரின் பிரமாதமான குரல் இதயத்தை மயக்குகிறது. இப்பாடலும், காஜல் அகர்வால் வருகையும் புயலுக்குப்பின் வரும் அமைதிபோல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காதல் படங்கள் என்றால் துல்கர் சல்மான் நடிப்பை சொல்லவா வேண்டும்? அவர், பாணியிலான நடிப்பிலேயே ’வாயை மூடாமால்’ பேசிக்கொண்டே காதலுடன் வாழ்ந்திருக்கிறார்.

”’நான் ஒரு போரிங் சாஃப்ட்வேர் என்ஜினியர்’, ‘ஐயாம் எ ஹவுஸ் ஹஸ்பண்ட்’, ‘பேச்சு எனக்கு ரத்த ஓட்டம் மாதிரி’, ’பிரியறதுக்கு ஆயிரம் கோடி வழியிருக்கும் ஆனா, சேர்ந்து வாழ ஒரேக் காரணம் காதல்’ போன்ற ஃப்ரெஷ் வனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளன.