கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு

0
93

கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு

ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை மணந்தார். இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CL-57Vzg91h/?utm_source=ig_embed

இது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், குழந்தை வந்துகொண்டிருக்கிறது. எனது கணவரும் நானும் இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அதீத மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வாழ்வின் புதிய அத்தியாத்தை தொடங்குவதற்கு உங்கள் அனைவரின் அன்புன் ஆசீர்வாதமும் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.