கமல்ஹாசனுடன் இணையும் சிவகார்த்திகேயன்

0
136

கமல்ஹாசனுடன் இணையும் சிவகார்த்திகேயன்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சில வேலைகள் சந்தோசத்தை தரும்; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா மற்றும் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும். தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா என்ற சினிமாவின் இரு பலமான சக்திகளுடன் இணைவது உற்சாகமளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த எனது நண்பர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.