கபில் ரிட்டர்ன்ஸ் இசைவெளியீட்டு விழா!

0
121

கபில் ரிட்டர்ன்ஸ் இசைவெளியீட்டு விழா!

”திரைப்படம் எடுப்பது தொழில் ஆனால் நல்ல கதைகளை படமாக எடுத்தால் அது தொண்டு” – கபில் ரிட்டர்ன்ஸ் இசைவெளியீட்டு விழாவில் சுப.வீ பேச்சு

”திரைப்படம் எடுப்பது தொழில் ஆனால் நல்ல கதைகளை படமாக எடுத்தால் அது தொண்டு” என கபில் ரிட்டர்ன்ஸ் இசைவெளியீட்டு விழாவில் சு.ப.வீ ரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கபில் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி, கவிஞர் சினேகன், இயக்குனர் பேரரசு, ஆ.வி.உதயகுமார் மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சு.ப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.வி. உதய குமார் தெரிவித்ததாவது..

”ஒரு பையனுக்கு கொரானோ வந்து அந்த  காலகட்டத்தில் ஒரு டைம் பாஸ்க்காக பவுலிங் போட்ட அப்பா ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் ஆகிருக்காரு. தமிழ் சினிமா எப்படி எல்லாம் ஒரு இயக்குனராக உருவாக்குது பாருங்க. நேற்று முன்தினம் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது. விஜய் ஆண்டனி மகள் உயிரை மாய்த்துக் கொண்டார். இதை கேட்கும் போது மனசு ரொம்ப வலிக்குது.

இப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் மகள் தற்கொலை விஜய் ஆண்டனி கைதா என டைட்டில் வைக்கிறாங்க. எவ்வளவு மோசமான செயல் இது.  ஏற்கனவே அவர் சோகத்தில் இருக்கிறார் அவர போயி கைதுன்னு போடுறாங்க. சினிமா ஊடகங்கள் எல்லாம் சரியா தான் இருக்கிறது. நடுவில் வந்த யூடியூப் தான் ரொம்ப மோசமா செயல்படுகிறார்கள் “ என தெரிவித்தார்.

இயக்குனர்‌ பேரரசு பேசும்போது…

“நானும்‌ சுப வீர பாண்டியனும்‌ ஒரே மேடையில்‌ இருப்பதால்‌ பலருக்கு சந்தேகம்‌ வந்து இருக்கலாம்‌.. நான்‌ ஆன்மீகவாதி சுப வீரபாண்டியன்‌ ஓர்‌
நாத்திகவாதி.

எங்களுக்கு கருத்து வேறுபாடுகள்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ கபில்‌ ரிட்டர்ன்ஸ்‌ படத்திற்காக நாங்கள்‌ இணைந்து வாழ்த்த வந்துள்ளோம்‌. சுப
வீரபாண்டியன்‌ கடவுள்‌ மறுப்பாளர்‌. என்றாலும்‌ அவருக்கு கடவுள்‌ இருக்கிறார்‌. காரணம்‌ வாழ்த்த வேண்டும்‌.. மற்றவர்களை பாராட்ட வேண்டும்‌ என்ற
எண்ணம்‌ அவருக்குள்‌ இருக்கிறது… எனவே அது கடவுளின்‌ குணம்‌. மற்றவர்களை வாழ்த்த நினைப்பதும்‌ கடவுளின்‌ எண்ணமே” என்று பேசினார்‌.

அதன்‌ பின்னர்‌ சுப வீரபாண்டியன்‌ பேசும்போது… “இந்த வயதிலும்‌ நான்‌ ஓய்வு இல்லாமல்‌ உழைத்துக்‌ கொண்டு இருக்கிறேன்‌. எனவே பலரும்‌ எப்படி
உழைக்ஒவிறீர்கள்‌ என கேட்கிறார்கள்‌. நாம்‌ ஓய்வெடுக்க நினைத்து விட்டால்‌ அது தேங்கி விடும்‌. ஓடிக்கொண்டே இருப்பதால்‌ உடல்நிலை நன்றாக
இருக்கிறது” என்று பேசினார்‌.

இதனைத் தொடர்ந்து பேசிய சுப வீரபாண்டியன் தெரிவித்ததாவது..

” நான் சமூக வலைதளத்தில் இந்த அழைப்பை பதிவிடும்போது இரண்டு கேள்வி எழுப்பப்பட்டது. ஒன்று திரைப்பட விழாவில் நீங்கள் எப்படி..? என்றனர்.  இயக்குனர் பேரரசும் நீங்களும் ஒரே மேடையில் எப்படி என 2வது கேள்வி எழுப்பினர்?. வேறு வேறு கட்சிகள் என்பது சினிமா மேடைக்கு அல்ல . எஜமான் படத்தையும் சின்ன கவுண்டர் படத்தையும் எங்கும் உட்கார்ந்து பார்த்தவன் நான். அந்த வாய்ப்பு இந்த மேடையில் கிடைத்துள்ளது. வையாபுரி பேசும் பொழுது நான் முப்பது வருடங்களாக ஒரே மாதிரி இருக்கிறேன் என்றார். அப்படி என்றால் தற்போது வயசு ஆகிவிட்டதோ..?

திரைப்படம் எடுப்பது தொழில் தான் நல்ல கதைகளை கொண்டு திரைப்படம் எடுத்தால் அது தொண்டு.திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியுமா என்று தெரியவில்லை. நாம் கலையை நேசிப்பதை விட கலைஞர்களை சிறப்பாக நேசிக்க கற்றுக் கொண்டோம். அதனால் ஆயிரம் மேடைகளில் பேசுவதை படத்தில் அரை மணி நேரத்தில் கூறி விடுகிறார்கள். படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அது மனதில் இருக்கும். அதனால் மக்களுக்கு நல்ல படைப்புகளை கொண்டு போய் சேர்க்கவும். மக்களுக்கு போய் சேரும் நல்ல கதைகளை எடுங்கள்.” என சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.