“கபடதாரி” விரைவில் திரையில்!

0
306

“கபடதாரி” விரைவில் திரையில்!

“கபடதாரி” திரைப்படத்தின் விளம்பர முன்னெடுப்புகள், தமிழின் புகழ்மிகு, பெரும் ஆளுமைகளின் பேராதரவில், மிகப்பெரும் பிரபல்யத்தை ரசிகர்களிடம், படம் வெளியாவதற்கு முன்பாகவே, பெற்றுதந்துள்ளது. ஏ ஆர் ரஹ்மான் முதல் நடிகர்கள் சூர்யா, மாதவன், ஆர்யா என முன்னணி பிரபலங்கள் இப்படத்தின் புரோமோக்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் சிபிராஜ், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூட்டணி ஏற்கனவே “சத்யா” படம் மூலம் பிரமாண்ட வெற்றியை தந்ததில், தற்போது இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மிகச்சரியான கதாப்பாத்திர தேர்வு மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பே, பெரும் வெற்றிக்கு தூணாகவுள்ளது. படத்தயாரிப்பாளர்கள் படத்தை மிகச்சரியான முறையில் கொண்டுவர, மிக அதிகமான காலத்தை செலவிட்டுள்ளனர்.

முதன்மை பெண் கதாப்பாத்திரத்தை பொறுத்தவரை பலரை தேர்வு செய்து அதில் ஒருவரை முடிவு செய்யும் வழியே இல்லை. நந்திதா ஸ்வேதா ஒருவரே மிகச்சரியானவராக இருந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால் அவர் மிகவும் பொருத்தமான தேர்வாக இருந்தார். நாசர் மற்றும் ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க தயாரிப்பாளர் J சதீஷ் குமார் திருப்புமுனை பாத்திரமொன்றில் படக்குழு அனைவரையும் அசர வைக்கும் நடிப்பை தந்துள்ளார். நாசர், ஜெயப்பிரகாஷ் மற்றும் நந்திதா மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்துள்ளார்கள். மற்ற அனைத்து பாத்திரங்களிலும், இரு மொழிகளிலும், வெவ்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

“கபடதாரி”. படத்தினை Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இப்படம் உலகம் முழுதும் திரையரங்குகளில் ஜனவரி 28, 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ:

Sibi Sathyaraj and Nandita Swetha-starrer Kabadadaari is gearing up for a worldwide theatrical release on January 28