கசடதபற விமர்சனம்

0
102

கசடதபற விமர்சனம்

பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் பிரபு தயாரிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சிம்புதேவன்.
நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது மற்றும் பலர் ஆறு கதைகளின் முன்னோடிகள்.
இசை: யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்;
ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர.
எடிட்டிங்:காசி விஸ்வநாதன். ராஜா முகம்மது, ஆண்டனி, விவேக் வர்ஷன், பிரவீன், கே.எல்.ரூபன்

கலை:ஜெயகுமார், சண்டை:திலீப் சுப்பராயன், பாடல்கள்:கங்கை அமரன், சினேகன், முத்தமிழ், உடை-வாசுகி பாஸ்கர், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.
மொத்தம் ஆறு கதைகளின் சங்கமம் கசடதபற. முதலில் ஏழை-பணக்கார காதல், தாதா அப்பாவின் பதவிக்காக ஆசைப்படும் மகன், என்கவுண்டர் போலீஸ், குறுக்கு வழியில் பணக்காரனின் அவல நிலை, குழந்தையைப் காப்பாற்ற போராடும் ஏழைப்பெண், போலி மருந்தால் தூக்கு தண்டனை பெற்ற அப்பாவி கைதி என்று ஒவ்வொரு கதை முடிவும் அடுத்த கதையின் துவக்கமாக ஒன்றோடொன்று இணைந்து பயணிப்பதே இப்படத்தின் ஹைலைட்ஸ்.
இதில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்கள் என்று பார்த்து பார்த்து அத்தனை பேரின் உழைப்பும் படத்தின் வெற்றிக்கு துணை போகிறது.
அத்தனை கதாபாத்திரங்களையும் ஒருங்கிணைத்து ஒரு தலைச்சிறந்த படத்தை கொடுத்து சிம்பு தேவனுக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் கசடதபற அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.