ஒ மை டாக் விமர்சனம் | ஒ மை டாக் கோடைக் காலத்தில் குழந்தைகளை குஷி படுத்தி அனைவரையும் கவர்ந்து ரசிக்க வைக்கும் படம் | ரேட்டிங் – 3.5/5

0
130

ஒ மை டாக் விமர்சனம் | ஒ மை டாக் கோடைக் காலத்தில் குழந்தைகளை குஷி படுத்தி அனைவரையும் கவர்ந்து ரசிக்க வைக்கும் படம் | ரேட்டிங் – 3.5/5

2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் ஒ மை டாக் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்  சரோவ் சண்முகம்.அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் இப்படத்தை காணலாம்.
இதில் அருண் விஜய், ஆர்னவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ராய், பானு சுந்தர், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சுவாமிநாதன், ப்ரியா ராஜ்குமார், ஷ்ரவன், பென்னி, சித்தி, க்ரித்திக், ஜான்கி, ஸ்பைக் ஜான்,மீப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-கோபிநாத், இசை-நிவாஸ் கே.பிரன்னா, படத்தொகுப்பு-மேகநாதன், கலை-மைக்கேல், பாடல்கள்-சூப்பர் சுப்பு, பாலாஜி, மோகன், சரஸ் மேனன், சண்டை-சில்வா, ஆடை-வினோதினி பாண்டியன், தலைமை தயாரிப்பு மேற்பார்வை-செந்தில் குமார், இணை தயாரிப்பு-ராஜ்சேகர் கற்பூரசுந்திரபாண்டியன், பிஆர்ஒ-யுவராஜ்.

மனைவி மகிமா, மகன் ஆர்னவ் மற்றும் தந்தை விஜய்குமார்ஆகியோருடன் ஊட்டியில் வசிக்கிறார் அருண் விஜய். நடுத்தர குடும்பம் என்பதால் அருண்விஜய் வீட்டின் மேல் கடன் வாங்கி உலகத்தர பள்ளியில் ஆர்னவை படிக்க வைக்கிறார். இதனிடையே ஊட்டியி;ல் பெரிய பணக்கரரான வினய் விலையுயர்ந்த நாய்களை வாங்கி வளர்த்து பயிற்சிகள் கொடுத்து பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே பொழுதுபோக்காக கொண்டவர். ஆறு போட்டிகளில் வென்றிருந்தாலும் ஏழாவதாக வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைக்க அதி தீவரமாக இருக்கிறார்.தன்னிடம் உள்ள அஸ்கி வகை நாய் குட்டிகளில் ஒன்று கண் தெரியாமல் இருப்பதை பார்த்து, அதை கொன்று விடும்படி தன் அடியாட்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்தக் குட்டியை எடுத்துச் செல்லும் போது தொலைந்து விட, அந்தக் குட்டி அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த கண் தெரியாத நாய்குட்டியை சிம்பா என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து. அர்னவ் பயிற்சியும் கொடுக்கிறார். பின்னர் வளர்ந்தவுடன் கண் ஆபரேஷன்  செய்து கண் பார்வை கிடைக்க வழி செய்கிறார். ஊட்டியில் நாய்களுக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெறுவதை அறிந்து சிம்பாவை அர்னவ் அதில் கலந்து கொள்ளச் வைக்கிறார். அதில் சிம்பா மூன்றாவதாக வென்று இறுதி போட்டிக்கு செல்கிறது. இதனால் கோபமடையும் பணக்கார வினய் சிம்பாவை போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார்.  இந்த நெருக்கடிகளை தாண்டி ஆர்னவ் சிம்பாவை எப்படி காப்பாற்றினார்? இதிலிருந்து சிம்பா மீண்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை.

அருண் விஜய் அனுபவ நடிப்பை தன் மகன் அர்னவ் விஜய்க்காக விட்டு கொடுத்து தந்தைக்குகேற்ற பங்களிப்பை அளவோடு கச்சிதமாக கொடுத்துள்ளார்.

அர்னவ் விஜய் தன் தந்தை அருண் விஜய், தாத்தா விஜயகுமார் ஆகியோருடன் முதல் முதலாக இந்த சிறிய வயதில் ஒன்றாக நடித்து தனி முத்திரை பதித்து சுட்டித்தனம், கோபம், மகிழ்ச்சி என்று குழந்தைக்கேற்ற மழலைத்தனத்துடன் சிறப்பாக செய்துள்ளார். இவருடன் ஈடு கொடுத்து சைபீரியன் அஸ்கி வகை நாயும் நன்றாக நடித்துள்ளது.

தாத்தா விஜயகுமார் கண்டிப்பு நிறைந்த பாசக்கார குணத்துடன் மனதில் நிற்கிறார்.

தாயாக மகிமா நம்பியார் நடுத்தர குடும்பத்தலைவியாக இயல்புடன் வந்து போகிறார். இவர்களுடன் ஸ்டைலிஷ் வில்லனாக வினய் ராய், பானு சுந்தர், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சுவாமிநாதன், ப்ரியா ராஜ்குமார், ஷ்ரவன், பென்னி, சித்தி, க்ரித்திக், ஜான்கி, ஸ்பைக் ஜான்,மீப்பு ஆகியோர் படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

குழந்தைகளையும், நாய்களையும் ஒருங்கிணைத்து காட்சிக்கோணங்களை அமைத்து வித்தியாசமாக ஒளிப்பதிவு செய்து ஊட்டியில் எழிலையும், இயற்கை சூழ்நிலையையும் கண் முன்னே நிறுத்தி கடின உழைப்போடு அசத்தியுள்ளார் கோபிநாத்.

சூப்பர் சுப்பு, பாலாஜி, மோகன், சரஸ் மேனன் ஆங்கில பாடல் வரிகளில்  தமிழ் மெட்டோடு இசையை குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் கொடுத்து. பின்னணி இசையையும் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார்.

தோய்வில்லாத கச்சிதமான படத்தொகுப்பு மேகநாதன், இயல்பான செட்களை அமைத்துள்ள கலை இயக்குனர் மைக்கேல்,சண்டை-சில்வா என்று அனைவரும் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

குழந்தைகளுக்கான படத்தை குடும்ப செண்டிமெண்ட் கலந்து நாயை பிரதானப்படுத்தி யதார்த்தமான கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் சரோவ் சண்முகம். வளர்ப்பு பிராணிகளிடம் அன்பு செலுத்தினால் அதற்கான பிரதிபலனை நமக்கு திருப்பி கொடுத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை சொல்லியிருக்கிறார். முதல் காட்சியிலேயே வில்லனின் நோக்கம், எண்ணம் தெளிவாக சொல்லிவிடுவதால் ஊகிக்ககூடிய திரைக்கதையோடு எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் கொடுத்து வெற்றிபெறுகிறார் இயக்குர் சரோவ் சண்முகம்.

மொத்தத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் ஒ மை டாக் கோடைக் காலத்தில் குழந்தைகளை குஷி படுத்தி அனைவரையும் கவர்ந்து ரசிக்க வைக்கும் படம்.