ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி

0
132

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’  அதிரடி ஆக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன்  அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டார். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, “அவரைப் பற்றி கூற ஒரு வார்த்தை போதாது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்… இனிமையானவர்” என தெரிவித்தார்.