”ஒரு அப்பாவின் மன்றாடல் இது: ஆணுக்குத் தனி பெண்ணுக்குத் தனி பாகுபாடு கூடாது” – கமல்ஹாசன்

0
149

”ஒரு அப்பாவின் மன்றாடல் இது: ஆணுக்குத் தனி பெண்ணுக்குத் தனி பாகுபாடு கூடாது” – கமல்ஹாசன்

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் “ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இன்று உலகு சமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாகுபாடு மாறவேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 11, 2012 ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதிலிருந்து ஆண்டுதோறும் அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது“ என்று கருத்து தெரிவித்துள்ளார்.