ஏப்ரல் 30-ம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் சுல்தான் தெலுங்கு பதிப்பு!

0
278

ஏப்ரல் 30-ம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் சுல்தான் தெலுங்கு பதிப்பு!

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது.

தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், சுல்தான் படத்தின் தெலுங்குப் பதிப்பு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் தமிழ் சுல்தானின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.