’எஸ்கே 20’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’

0
156

’எஸ்கே 20’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’

சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 20’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் லைகாவுடன் இணைந்து தயாரித்து நடித்திருந்த ‘டான்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து ’ஜதிரத்னலு’ இயக்குநர் அனூதிப்புடன் இணைந்து தமிழ் – தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடித்து வருகிறார். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடிக்கிறார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சத்யராஜ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். ’டான்’ வெளியீட்டையொட்டி தொடர்ந்து தமிழகம் மற்றும் ஹைதராபாத்தில் தியேட்டர்களுக்கு விசிட் செய்துவந்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ‘எஸ்கே20’ படத்தின் பாடல் காட்சிக்காக டான்ஸ் ரிகர்சலில் பங்கேற்றார். டான்ஸ் ரிகர்சலில் அவருடன் நாயகி மரியா ரியாபோசப்காவும் இணைந்திருந்தார்.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘எஸ்கே20’ படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதேதேதியில் நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள ‘விருமன்’ வெளியாவது குறிப்பிடத்தக்கது.