என்ன சொல்ல போகிறாய் விமர்சனம்: பார்க்க வரும் காதலர்களை என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டு இம்சித்து விடுகிறது
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரித்திருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிஹரன்.
இதில் அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன், தேஜுஅஷ்வினி, அவந்திகா மிஷ்ரா, புகழ், டெல்லிகணேஷ், சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, பிரியதர்ஷினி ராஜ்குமார், ஹரிப்பிரியா, ஷாலினி சரோஜ், பிரதீப், டி.எம்.கார்த்திக், இந்துமதி, வைத்தியநான் பத்மநாபன், சினேகா குமார், ஜெய், பூஜா, ஸ்ரீநிதரி, டாங்கிலி ஜம்போ, வைஷ்ணவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ரிச்சர்ட் நாதன், இசை-விவேக்-மெர்வின், கலை-துரைராஜ், படத்தொகுப்பு-மதிவதனன், வசனம்-பாலகுமாரன், பாடல்வரிகள்-கு.கார்த்திக், மாதிவன், பிரகாஷ் பிரான்சிஸ், நடனம்-பிருந்தா, அப்சர், ஒலிக்கலவை-சுரென், ஒலிவடிவமைப்பு-சுரேன்,அழகிய கூத்தன், ஸ்டில்ஸ்-ஜெயகுமார் வைரவன், தயாரிப்பு மேற்பார்வை-செல்வராஜ், அஷ்ரஃப், தயாரிப்பு நிர்வாகம்-சக்தி ரூபினி, ஜெயராமன், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா.
அஸ்வின் தனியார் எஃப்எம்மில் ஆர்ஜேவாக வேலை செய்கிறார். தனக்கு காதலி அல்லது மனைவியாக வருபவர் தான் நினைத்தவாறு இருக்க வேண்டும் என்ற கண்டிஷன் போடுவதால் சிங்கிளாகவே இருக்கிறார். இதனிடையே காதல் கதைகளை எழுதும் எழுத்தாளர் அவந்திகா மிஷ்ராவை பெண் பார்க்க செல்ல பிடித்துப்போகிறது. அவந்திகாவின் கண்டிஷன் காதலித்து ஏமாந்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இதை சற்றும் எதிர்பார்க்காத அஸ்வின் முன்னாள் காதலி இருப்பதாக பொய் சொல்லி விடுகிறார். இதற்காக தன் நண்பன் புகழுடன் சேர்ந்து காதலியை தேட தேஜுஅஸ்வினியை சமரசம் செய்து நடிக்க வைக்க அழைக்கிறார். தேஜு அஸ்வினிக்கு புது யுக்தி கலந்த நாடக நடிகையாக வலம் வந்து உலகம் முழுவதும் சென்று நாடகத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே கனவு. தேஜு அஸ்வினி தன் கனவிற்கு தடை போடும் தாத்தாவின் திருமண வற்புறுத்தலுக்கு முடிவு கட்டவே அஸ்வின் காதலியாக நடிக்க சம்மதிக்கிறார். முதலில் காதலியாக நடிக்க வந்து அவந்திகாவுடனும், அஸ்வினுடனும் பழகும் போது தானாக அஸ்வினை காதலிக்க தொடங்கிவிடுகிறார். இவர்களின் திருமணம் தன்னால் தடைபட கூடாது என்றெண்ணி அஸ்வினை விட்டு பிரிந்து தேஜு அஸ்வினி மலேசியா சென்று விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? அஸ்வினுக்கு அவந்திகாவுடன் திருமணம் நடந்ததா? தேஜு அஸ்வினி காதல் கை கூடியதா? என்பதே என்ன சொல்ல போகிறாய் கதை.
இதில் முதல் படத்தில் அஸ்வின் விக்ரமாக இரண்டு பெண்களின் காதலில் சிக்கி தவிக்கும் கதாபத்திரத்தில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற மனக்குழப்பதில் இருப்பதால் இவரின் நம்பகதன்மை கேள்விக்குறியாக படத்தில் மனநிறைவை தராதது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இவருடன் தேஜு அஷ்வினி முக்கிய கதாபாத்திரம் படம் முழுவதும் தன் திறமையை வெளிப்படுத்தி பேச்சுத் திறமையோடு அழகாக வலம் வருகிறார். அவந்திகா மிஷ்ரா படத்தின் இறுதிக் காட்சிக்கு உத்திரவாதமான முடிவை தந்து விட்டு போகிறார். இவர் முடித்த வைக்கவில்லை என்றால் படம் இன்னும் நீண்டு கொண்டே தான் போயிருக்கும்.
மற்றும் காமெடிக்காக வரும் புகழ், டெல்லிகணேஷ், சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, பிரியதர்ஷினி ராஜ்குமார், ஹரிப்பிரியா, ஷாலினி சரோஜ், பிரதீப், டி.எம்.கார்த்திக், இந்துமதி, வைத்தியநான் பத்மநாபன், சினேகா குமார், ஜெய், பூஜா, ஸ்ரீநிதரி, டாங்கிலி ஜம்போ, வைஷ்ணவி ஆகியோர் படத்திற்கு துணை போகின்றனர்.
ரிச்சர்ட் நாதனின் காட்சிக் கோணங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், புதுவித புத்துணர்ச்சியோடு வர்ண ஜாலங்களால் ரிச்சாக காண்பித்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கார்த்திக், மாதிவன், பிரகாஷ் பிரான்சிஸ் ஆகியோரின் பாடல் வரிகளில் விவேக்-மெர்வின் இசை கேட்கும் ரகம்.
கலை-துரைராஜ் பரவாயில்லை. படத்தொகுப்பு-மதிவதனன், வசனம்-பாலகுமாரன் கொஞ்சம் இழுவை இல்லாமல் கச்சிதமாக கொடுத்திருக்கலாம்.
முக்கோண காதல் கதை அதை இக்கால இளவுகளின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இயக்கியிருந்தாலும் முதல் பாதி நகர்த்திய விதம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் என்ன செய்வதென்று தெரியாமல் படம் முழுவதும் பேசிப்பேசியே கதையை நகர்த்தி ஒரு வழியாக முடித்து வைத்துள்ளார் இயக்குனர் ஹரிஹரன்.
மொத்தத்தில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிப்பில் படம் பார்க்க வரும் காதலர்களை என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டு இம்சித்து விடுகிறது.