என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் புகழ் டிகேஎஸ் நடராஜன் மரணம்

0
211

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் புகழ் டிகேஎஸ் நடராஜன் மரணம்

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமான பாடகரும், நடிகருமான டிகேஎஸ் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமானவர் பாடகரான டிகேஎஸ் நடராஜன். அவர் பாடல்கள் பாடியதுடன் படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

டிகேஎஸ் கலைக்குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். அந்த குழுவில் இருந்ததால் தான் அவர் டிகேஎஸ் நடராஜன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.

1954ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் படம் மூலம் நடிகரான நடராஜன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக் என்று பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தவர். சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை தன்னை கவனிக்கச் செய்தவர். படங்கள் தவிர்த்து கச்சேரிகளிலும் பாடி வந்த நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் இன்று காலை 6.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.

டிகேஎஸ் நடராஜனின் மறைவு குறித்து அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

டிகேஎஸ். நடராஜன் மறைவுக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும்.. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தான் இயக்குநர்கள் தாமிரா, கே.வி. ஆனந்த், மூத்த நடிகர் செல்லத்துரை என்று மூன்று பேர் காலமானார்கள். இந்நிலையில் இன்று நடராஜன் இயற்கை எய்தினார்.