எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதி வெளியானது

0
151

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதி வெளியானது

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் டீசர் தேதியை இயக்குனர் பாண்டிராஜ் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.