எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருந்து உள்ளது – யுவன் மனைவி ஸஃப்ரூன் நிஸார்
ஸஃப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணலை வழங்கியுள்ளார்.
எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவை போலவே இசை ஆர்வலர்களிடையே தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் எப்போதும் தனது இசையால் படங்களின் வெற்றியை எளிதாக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஸஃப்ரூன் நிஸார் என்பவரை மணந்து இஸ்லாமிற்கு மாறினார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
ஸஃப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணலை வழங்கியுள்ளார். அதில் அனைத்து வகையான தனிப்பட்ட கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளித்தார். அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவனின் மனைவி ஸஃப்ரூன், “யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.